நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 175 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 175 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான காந்திசெல்வன் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத் தலின்படி மத்திய, மாநில அரசுகளின் மிக மோசமான செயல்பாடுகளை பொது மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் 175 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்துவது.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து ஊராட்சி மற்றும் வார்டுகளில் 1001 இடங்களில் தி.மு.க. கொடி ஏற்றுவது, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கோட்டையாக மாற்றுவது, மாவட்டம் முழுவதும் தி.மு.க. உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்குவது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுசாமி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் தி.மு.க. செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story