கர்ப்பிணி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் அதிரடி கைது - ஒரு பவுன் தங்க காசுக்காக கொன்றது அம்பலம்
மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஜலகண்டாபுரம்,
ஜலகண்டாபுரம் அருகே திருமண உதவித்தொகை திட்டத்தில் அரசு வழங்கிய ஒரு பவுன் தங்க காசை பெற்றோரிடம் இருந்து வாங்கி வராத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவரை ஜலகண்டாபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே கரிகாப்பட்டி கிராமம், ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் ராஜவேலு (வயது 22). இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த சந்திரன்-சந்தியா தம்பதியரின் மகள் புவனேஸ்வரிக்கும்(21) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் புவனேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்தின் போது அவருடைய பெற்றோர், திருமண உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து இருந்தனர். அவருக்கு ஒரு பவுன் தங்க காசும், ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும் வழங்குவதற்கு அரசு உத்தரவு சமீபத்தில் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 19-ந் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு புவனேஸ்வரியின் தாயார் சந்தியா, மாமனார் சண்முகம் ஆகியோர் சென்று ரூ.50 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்க காசை வாங்கி வந்தனர். இதில் தங்க காசை புவனேஸ்வரியின் தாயார் சந்தியா தனது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜவேலு, தங்க காசை உனது அம்மா வீட்டுக்கு சென்று வாங்கி வா என புவனேஸ்வரியை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
கடந்த 22-ந்தேதி காலை தனது தாயார் வீட்டுக்கு சென்ற புவனேஸ்வரி அங்கு பெற்றோரிடம், கணவர் மற்றும் மாமனார் சண்முகம், மாமியார் பழனியம்மாள் ஆகியோர் தங்க காசை வாங்கி வரச்சொல்லி தன்னை திட்டுகிறார்கள் என்று கூறி அழுதார். அதற்கு அவரது தாயார் சந்தியா, இந்த ஒரு பவுன் தங்க காசோடு மேலும் 2 பவுன் சேர்த்து 3 பவுனில் தங்க சங்கிலி செய்து தருகிறேன், இப்போது கணவர் வீட்டுக்குச் செல் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு தனது கணவர் வீட்டுக்கு சென்ற புவனேஸ்வரி அன்று மாலையே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் சந்தியாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே சந்தியாவும், அவரது உறவினர்களும் கதறி அழுதபடி புவனேஸ்வரியின் உடலை பார்க்க அங்கு சென்றனர். அங்கு கட்டில் மீது புவனேஸ்வரியின் உடல் கிடந்தது. மேலும் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் ரத்தக்காயம் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த புவனேஸ்வரியின் தாயார் சந்தியா, எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை, எனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்ம சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் புவனேஸ்வரியின் கணவர் ராஜவேலு, மாமனார் சண்முகம், மாமியார் பழனியம்மாள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வந்தனர். திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆனதால் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் லலிதாவும் நேற்று முன்தினம் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது ராஜவேலு கூறியதாவது:-
திருமண உதவித்தொகை திட்டத்தில் எனது மனைவிக்கு கிடைத்த ஒரு பவுன் தங்க காசை எனது மாமியார் அவர்களுடைய வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார். இதனால் கோபம் அடைந்த நான் உங்கள் வீட்டுக்கு சென்று தங்க காசை வாங்கி வா எனக்கூறி அனுப்பி வைத்தேன். அங்கு சென்றவள் தங்க காசை வாங்காமல் வெறும் கையோடு திரும்பி வந்தாள். ஏன் தங்ககாசை வாங்கி வரவில்லை என கேட்டதற்கு சரியான பதிலை சொல்லவில்லை.
இதனால் கோபமடைந்த நான் எனது மனைவி புவனேஸ்வரியை அடித்தேன். அவள் திருப்பி என்னை அடித்தாள். இதையடுத்து மீண்டும் கோபமான நான் அவளின் முகத்தில் ஓங்கி குத்தினேன். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவள், பேச்சு மூச்சில்லாமல் இருந்தாள். அதன்பிறகு அருகில் இருந்த தலையணையை எடுத்து அவளது முகத்தின் மீது அமுக்கினேன். அப்போதும் உயிர் போகாததால் கழுத்தில் இருந்த தாலி கயிற்றோடு சேர்த்து இறுக்கி கொலை செய்தேன். தாலி கயிறு அறுந்து போனதால் அருகில் கிடந்த கயிற்றை எடுத்து கழுத்தில் போட்டு மீண்டும் இறுக்கி கொன்றேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையின் படி கர்ப்பிணி மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜலகண்டாபுரம் போலீசார் பதிவு செய்தனர். மேலும் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவர் ராஜவேலுவை கைது செய்து மேட்டூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story