15 வேலம்பாளையம் பகுதியில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - போலீசார் விசாரணை


15 வேலம்பாளையம் பகுதியில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Dec 2018 3:45 AM IST (Updated: 26 Dec 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 15வேலம்பாளையம் பகுதியில் தலையில் கல்லை போட்டு பனியன் நிறுவன தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 


திருப்பூர் 15வேலம்பாளையம் கண்மணி கார்டன் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், அந்த வாலிபரின் உடல் அருகே ரத்தக்கறையுடன் கூடிய பாறாங்கல்லும், மதுபாட்டில் களும் கிடப்பதாக நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தி யில் தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து உடனடியாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தலை மற்றும் முகம் சிதைந்த நிலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபர் தேனி மாவட்டத்தை சேர்ந்த தியாகு(வயது 25) என்பதும், இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தியாகுவை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற மர்ம ஆசாமிகள் அவருடன் அங்கு மது அருந்தியுள்ளனர். பின்னர் அவரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு படுகொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கிளி ஜோதிடர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றும் 15 வேலம்பாளையம் பகுதியில், வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story