குலாம்நபி ஆசாத் புதுவை வந்தார் நாராயணசாமி- நமச்சிவாயம் சந்திப்பு


குலாம்நபி ஆசாத் புதுவை வந்தார் நாராயணசாமி- நமச்சிவாயம் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 5:15 AM IST (Updated: 26 Dec 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்நபி ஆசாத் நேற்று புதுச்சேரி வந்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர்.

புதுச்சேரி,

தனது குடும்பத்தினருடன் புதுவை வந்துள்ள குலாம்நபி ஆசாத் மணவெளி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். ஓய்வு எடுப்பதற்காக அவர் புதுவை வந்துள்ளார். அவரது வருகைக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்று காங்கிரசார் தெரிவித்தனர். இருந்தபோதிலும் தமிழகம், புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்து குலாம்நபி ஆசாத் ரகசியமாக ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை அவர் தனது குடும்பத்தினருடன் புதுவை பழைய துறைமுக மேம்பாலம், கடற்கரை உள்ளிட்ட இடங்களை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர் கந்தசாமி அவருடன் சென்றார்.

Next Story