கோவில்பட்டியில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 26 Dec 2018 4:59 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் டாஸ்மாக் பணியாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, டாஸ்மாக் விற்பனை பணத்தை கொள்ளையடித்தவர்களை கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களின் உயிருக்கும், விற்பனை பணத்துக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாற்று பணி காலதாமதமின்றி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு வங்கி ஊழியர்கள் நேரடியாக சென்று, பணத்தை வசூலிக்க வேண்டும். பணியாளர்களை முறைப்படுத்தி, பணி பகிர்வு மாற்றம் செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் பார் உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புங்கலிங்கம், மாநில துணை தலைவர் மரகதலிங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பிரான்சிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜ்குமார், முத்துராஜ், எல்.பி.எப். மாவட்ட தலைவர் வேல்முருகன், பிரசார செயலாளர் இம்மானுவேல், எல்.எல்.எப். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாரியப்பன் உள்பட திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story