நெல்லையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கிராம நர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை,
பட்டா மாறுதல்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கிராம நர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு சங்கத்தினர் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று 17–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா தலைவர்கள் மணிகண்டன், ஜெயராமன், சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் நாராயணன், பொன்ராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, கிராமங்களில் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் வருவாய் துறை தொடர்பான பணிகள் முடங்கி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story