2 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
2 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும். விடுபட்ட போனஸ் தொகையை வழங்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி மேட்டுத்தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி கிளை செயலாளர்கள் ரமேஷ்குமார், காளிதாஸ், மாவட்ட துணை செயலாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் செல்வம், அறிவழகன், கிருஷ்ணசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story