தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 75). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலியபெருமாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலவனாசூர்கோட்டை அருகே உள்ள செம்பியன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மகாலட்சுமி(35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மகாலட்சுமி விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story