பிரசாதத்தில் விஷம் கலந்த விஷயத்தில் கைது: சாளூர் மடத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இளைய மடாதிபதி மகாதேவசாமி நீக்கம்
பிரசாதத்தில் விஷம் கலந்த விஷயத்தில் கைதாகி உள்ள சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, மடத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள கிச்சுகுத்தி மாரம்மா அம்மன் கோவிலில் விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்ட 17 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலந்ததாக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, அவருடைய கள்ளக்காதலி அம்பிகா, அவரது கணவர் மாதேஷ் மற்றும் அவர்களின் கூட்டாளி தொட்டய்யா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மைசூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாரம்மா அம்மன் கோவிலை அரசு எடுத்துக் கொண்டது. தற்போது அந்த கோவில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகி சின்னப்பி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய சின்னப்பி, ‘‘தான் ஒரு கனவு கண்டதாகவும், அதில் தோன்றிய மாரம்மா அம்மன் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், அதில் 4 பேரைத்தான் போலீசார் கைது செய்துள்ளதாகவும் சொன்னார் என்றும், மேலும் கோவிலை அரசுடமையாக்க கூடாது என்றும் கூறினார் எனவும்’’ தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு இதுபற்றி பேட்டி அளித்த நரேந்திரா எம்.எல்.ஏ., ‘‘சின்னப்பி நாடகமாடுகிறார். கோவிலை அரசுடமையாக்க கூடாது என்ற மாரம்மா அம்மன், ஏன் பக்தர்களை காப்பாற்றவில்லை. சின்னப்பியின் கனவில் தோன்றிய அம்மன், மக்கள் பாதிக்கப்பட்டபோது எங்கே போனார். மேலும், பிரசாதத்தில் விஷம் கலக்கப்படுவது குறித்து அம்மன் முன்கூட்டியே சின்னப்பியின் கனவில் தோன்றி சொல்லி இருக்கலாமே?. அப்பாவி மக்களை காப்பாற்றி இருக்கலாமே?. அம்மன் தன் கனவில் தோன்றியதாக சின்னப்பி கூறுவது முற்றிலும் மூடநம்பிக்கையானது. இது கண்டிக்கத்தக்கது’’ என்று கூறினார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி கைது செய்யப்பட்டு இருப்பதால், அவரை மடத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நேற்று தலைமை மடாதிபதி குருசாமி நீக்கினார். மேலும் சாளூர் இளைய மடாதிபதியிடம் இருந்த மடத்தின் நிர்வாக பொறுப்பு, மடத்திற்கு சொந்தமான நிலங்கள், கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் பள்ளிகள், ஆசிரமங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு ஆகியவை தலைமை மடாதிபதியிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
மேலும் சட்ட ரீதியாகவும் இளைய மடாதிபதி மகாதேவசாமியை சாளூர் மடத்தில் இருந்து நீக்க மடத்தின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story