மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.200 கோடி பணபரிவர்த்தனை முடங்கியது


மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.200 கோடி பணபரிவர்த்தனை முடங்கியது
x
தினத்தந்தி 26 Dec 2018 11:15 PM GMT (Updated: 26 Dec 2018 10:06 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.200 கோடிக்கு பணபரிவர்த்தனை முடங்கியது.

நாமக்கல்,

வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.200 கோடிக்கு பணபரிவர்த்தனை முடங்கியது.

பொதுத்துறை வங்கிகளான பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி போன்ற வங்கிகளை இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை கைவிட வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள், மற்றும் சில தனியார் வங்கிகளின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை முடங்கியது. பெரும்பாலான வங்கி கிளைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. எனவே வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது குறித்து வங்கி தொழிற் சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேங்கடசுப்பிரமணியன் கூறியதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,400 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் 145 வங்கி கிளைகள் மூடப்பட்டு உள்ளன. எங்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.200 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை முடங்கி உள்ளது. வங்கிகள் இணைக் கப்பட்டால் பல வங்கி ஊழியர்கள் கட்டாயமாக பணியில் இருந்து விலக வேண்டிய நிலை வரும். ஏராளமான வங்கி கிளைகளும் மூடப்படும் சூழல் உருவாகும். எனவே அரசு அதை கைவிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story