விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராடுவோம் - குமாரபாளையத்தில் போராட்டக்குழு தலைவர் பேட்டி
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம், என்று குமாரபாளையத்தில் போராட்டக்குழு தலைவர் கூறினார்.
குமாரபாளையம்,
விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பதிலாக சாலையோரங்களில் புதைவட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா படைவீடு சாமாண்டூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று நான்காவது நாளாக நீடித்தது.
அப்போது உண்ணாவிரத போராட்டக்குழு தலைவர் பெருமாள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூறியதாவது:-
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில், விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டமும், 23-ந் தேதியிலிருந்து கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. வருகிற 30-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத பந்தல் அருகே உள்ள மைதானத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆதரவு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. வருகிற ஜனவரி 2-ந் தேதி சட்டமன்றம் கூடுகிறது. அதற்கு முன்பாக தமிழக அரசு வருகிற 30-ந் தேதிக்குள் அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சென்னை சென்று கோரிக்கை நிறைவேறும் வரை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று உண்ணாவிரதம் இருந்த முத்துசாமி, முருகவேல், சுப்பிரமணி, பச்சியப்பன், பொன்னுசாமி ஆகிய 5 பேர் உடல் நலக்குறைவால் மயக்கம் அடைந்தனர். அங்கு வந்த டாக்டர் அவர்களை பரிசோதனை செய்தார். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5 பேருக்கு மாற்றாக வெப்படை சண்முகம், வெப்படை பார்த்திபன், பிருத்திவிராஜ், சதீஷ்குமார், சுரேஷ் ஆகிய 5 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்று உள்ளனர்.
விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. மாநில பொருளாளருமான அ.கணேசமூர்த்தி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருச்செங்கோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த வக்கீல் சி.எம்.துளசிமணி மற்றும் பொன்னையன், கோபால் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசினர்.

Related Tags :
Next Story