500 புதிய ஏ.சி. பஸ்கள் வாங்க போக்குவரத்து கழகம் திட்டம்


500 புதிய ஏ.சி. பஸ்கள் வாங்க போக்குவரத்து கழகம் திட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2018 5:00 AM IST (Updated: 27 Dec 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

மாநிலம் முழுவதும் இயக்க போக்குவரத்து கழகம் புதிதாக 500 ஏ.சி. பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில போக்குவரத்து கழகம் சார்பாக ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மும்பை பெருநகர பகுதியில் மட்டும் 72 ஏ.சி. பஸ்கள் தினந்தோறும் தானே - போரிவிலி இடையே இயக்கப்படுகிறது. இதே போல் 42 ஏ.சி. பஸ்கள் தானே- பயந்தர் இடையே இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே இந்த வழித்தடங்களில் கூடுதல் ஏ.சி. பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும் மந்திராலயா-தானே, மந்திராலயா- பன்வெல் மற்றும் தாதர்- பன்வெல் இடையேயும், மற்ற பகுதிகளிலும் ஏ.சி. பஸ் சேவையை தொடங்க உள்ளது.

இதற்காக மேலும் 500 ஏ.சி. பஸ்களை வாங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதன் மேலாளர் ரஞ்சித் சிங் டியோல் கூறுகையில் ‘‘ பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் நாங்கள் மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏ.சி. பஸ்களின் சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக 500 புதிய பஸ்கள் வாங்க இருக்கிறோம்’’ என்றார்.

Next Story