ஜனவரி 5-ந் தேதி மராட்டிய அரசு அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம்
ஜனவரி 5-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மராட்டிய அரசு அதிகாரிகள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு அளிக்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்க வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம், அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரசு அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 5-ந் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 1½ லட்சம் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், அரசு வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நாள் என அறிவித்தால் தினமும் கூடுதலாக 45 நிமிடங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
7-வது ஊதிய குழு பரிந்துரைகள் வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறியிருந்தார். 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தவும், அரசு ஊழியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க மட்டும் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும் என கூறப்படுகிறது.

Related Tags :
Next Story