மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து சேலத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் - மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார் + "||" + Two wheeler awareness rally in Salem on avoiding plastic use - Commissioner of the Municipality started

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து சேலத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் - மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து சேலத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் - மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்
பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து சேலத்தில் நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ஊர்வலத்தை ஆணையாளர் சதீஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகம், செரி ரோடு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கோரிமேடு சட்டக்கல்லூரி வரை சென்றடைந்தது. அப்போது ‘நீர்நிலைகளை காப்போம்‘, ‘கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் போது துணிப்பை எடுத்து செல்வோம்‘ என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருந்தனர். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறும் போது, ‘தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி மக்களுக்கு வருகிற 30-ந் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அரசு அறிவுரையின் பேரில், அபராதம் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

இந்த ஊர்வலத்தில் செயற்பொறியாளர் அசோகன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, கோவிந்தன், ஜெயராஜ், போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்கள் கைது
எலெக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியதாக சேலத்தை சேர்ந்த 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
2. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
3. சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டு விவசாயிகளின் நிலம் அவர்களுக்கே சொந்தமாகும் வரை பா.ம.க. போராடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டு விவசாயிகளின் நிலம் அவர்களுக்கே சொந்த மாகும் வரை பா.ம.க. போராடும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
4. சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
5. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து
கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் காயம் அடைந்தார்.