மாவட்ட செய்திகள்

புதுச்சத்திரம் பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு வலைவீச்சு + "||" + Putuccattiram The employee was cut in the gasoline punk Flush wallet

புதுச்சத்திரம் பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு வலைவீச்சு

புதுச்சத்திரம் பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கு வலைவீச்சு
புதுச்சத்திரம் பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பையை பறித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர், 

பரங்கிப்பேட்டை அருகே மணிக்கொல்லை பால்வாத்துண்ணான் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவேல். இவருடைய மகன் சிவசங்கர் (வயது 30). இவர் புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். இதன் மூலம் வசூலான பணத்தை பையில் வைத்திருந்தார். இரவு 9.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் சிவசங்கரிடம் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினர்.

அதன்பேரில் சிவசங்கரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் டேங்கில் முழுமையாக பெட்ரோல் நிரப்பினார். இதையடுத்து அவர் பணம் கேட்டதற்கு, அவர்கள் 3 பேரும் பணம் இல்லை என்று கூறி, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் சிவசங்கர் பணப்பையை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென சிவசங்கரை தலையில் சரமாரியாக வெட்டினர். இதை தடுத்த அவரது கையிலும் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணப்பையை பறித்த 3 பேரும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதற்கிடையில் பலத்த காயமடைந்த சிவசங்கரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சத்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது
கும்பகோணம் அருகே நடந்த பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின்ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
2. குன்னம் அருகே பரபரப்பு ஆசிரியர்களின் கடன் தொகை ரூ.13 லட்சம் கையாடல் ஓய்வுபெற்ற ஊழியர் சிக்கினார்
குன்னம் அருகே ஆசிரியர்களின் ரூ.13 லட்சம் கடன் தொகையை கையாடல் செய்த ஓய்வுபெற்ற ஊழியர் சிக்கினார்.
3. திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
திருச்சியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை குத்திக்கொன்ற ஐ.டி. நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர் கைது
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
5. இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4,500 லஞ்சம் சார்பதிவாளர் அலுவலக பெண் ஊழியர் கைது
மோகனூர் அருகே, இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் அலுவலக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.