கோவையில் தொடர் திருட்டு: கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை


கோவையில் தொடர் திருட்டு: கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 4 கடைகள் உள்ளன. அந்த கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்றுக்காலை வழக்கம் போல அவர்கள் கடைகளை திறக்க வந்தனர். ஆனால் கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவை காட்டூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் அங்கு டீ தயாரிக்கும் எந்திரங்களை விற்கும் கடை வைத்துள்ள கமலேஷ் கெஜ்ரிவால்(வயது 56) என்பவர் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த ரூ.4 ஆயிரத்தை திருடியுள்ளனர். அதன்பின்னர் பக்கத்தில் பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கும் எந்திரங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள கிருஷ்ணகுமார்(51) என்பவர் கடைக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்துள்ளனர். அங்கிருந்த ரூ.6 ஆயிரம் திருடப்பட் டது. அதைத் தொடர்ந்து பேரிங் கடை வைத்துள்ள அப்துல்ரஷீத்(44) என்பவர் கடைக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்து ரூ.3 ஆயிரத்து 400ஐ திருடியுள்ளனர். அந்த கடைக்கு அருகில் மேகல்(36) என்பவர் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் அந்த கடையில் பணம் இல்லாததால் சென்று விட்டனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Next Story