பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு


பாராளுமன்ற தேர்தலில்  தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:15 AM IST (Updated: 27 Dec 2018 8:35 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

ஸ்பிக்நகர், 

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பூபதி, பிரமசக்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது;–

பாராளுமன்ற தேர்தல்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட அனைத்து இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். அந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி நாட்டிலேயே இல்லை என்ற நிலை வர வேண்டும்.

நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் ஆக வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அவர் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாறோ அவரை வெற்றி பெற செய்வது நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ரமேஷ், பார்த்தீபன், ஜோசப், நல்லமுத்து, பாலசிங், ரவி, நவீன்குமார், மகாராஜன், சண்முகையா, கொம்பையா, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி அருண்குமார், விவசாய அணி ஆஸ்கார், வர்த்தகர் அணி மகேந்திரன், விவசாய தொழிலாளர் அணி அறவாளி, ஆதிதிராவிடர் நலக்குழு ராஜேந்திரன், மகளிர் தொண்டர் அணி வேலம்மாள், பொறியாளர் அணி ஆனந்த் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், வட்ட, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story