புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை வடமாதிமங்கலத்தில் பரபரப்பு


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை வடமாதிமங்கலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:15 AM IST (Updated: 27 Dec 2018 10:33 PM IST)
t-max-icont-min-icon

வடமாதிமங்கலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஆரணி, 

களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட இடத்தில் அரசு டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் பூஜை செய்து திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பதற்கு ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுபாட்டில்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக கடையை திறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 75-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது எனக்கூறி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், போளூர் தாசில்தார் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் தியாகராஜனிடம் அவர்கள், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் இங்கு வரும் மதுபிரியர்களால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்றனர். இதையடுத்து தாசில்தார் ஆரணி உதவி கலெக்டர் மைதிலிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டார். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story