அனைத்து விடுதிகளிலும் காவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம்
அனைத்து விடுதிகளிலும் காவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திருச்சியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காப்பாளர் மற்றும் காப்பாளினிகளுக்கு உதவி மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கல்லூரி விடுதிகளில் பணிபுரியக்கூடிய பட்டதாரி காப்பாளர்களுக்கு முதுநிலை பட்டதாரி காப்பாளர் என்ற பணியிடத்தை உருவாக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதிகளுக்கு 3 சமையலர்கள் பணியிடங்களை ஒதுக்க வேண்டும். பிற்பட்டோர் நலத்துறை விடுதிகளை பிறதுறை அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலைக்கு கீழ் உள்ள அதிகாரிகள் கண்டிப்பாக ஆய்வு செய்யக்கூடாது.
பிற்பட்டோர் நலத்துறையை வருவாய்த்துறையில் இருந்து பிரித்து தனித்துறையாக உருவாக்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் காவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொருளாளர் ராஜூ நிதிநிலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் வினோத்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் சுபாஷ் நன்றி கூறினார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்-ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. மாநில நிறுவனத்தலைவர் சகாதேவன், மாநில தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுச்செயலாளர் மணிமொழி முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காப்பாளர் மற்றும் காப்பாளினிகளுக்கு உதவி மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கல்லூரி விடுதிகளில் பணிபுரியக்கூடிய பட்டதாரி காப்பாளர்களுக்கு முதுநிலை பட்டதாரி காப்பாளர் என்ற பணியிடத்தை உருவாக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதிகளுக்கு 3 சமையலர்கள் பணியிடங்களை ஒதுக்க வேண்டும். பிற்பட்டோர் நலத்துறை விடுதிகளை பிறதுறை அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலைக்கு கீழ் உள்ள அதிகாரிகள் கண்டிப்பாக ஆய்வு செய்யக்கூடாது.
பிற்பட்டோர் நலத்துறையை வருவாய்த்துறையில் இருந்து பிரித்து தனித்துறையாக உருவாக்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் காவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொருளாளர் ராஜூ நிதிநிலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் வினோத்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் சுபாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story