வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:15 AM IST (Updated: 28 Dec 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

லால்குடியில் பகுதியில் மாந்துறை ஊராட்சியில் இருந்து ஆங்கரை, லால்குடி, மணக்கால், நடராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாய்க்கால் கரையோரம் கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன.

லால்குடி,

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, லால்குடி கிளை நீதிமன்றம் அருகே மணக்கால் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் ஓட்டல் மற்றும் அதனை ஒட்டியுள்ள 3 அடுக்குமாடி வணிக வளாகம் ஆகியவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோபிகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், தாசில்தார் சத்தியபால கங்காதரன், பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

இதையொட்டி லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், மாந்துறையில் இருந்து லால்குடி பேரூராட்சி பகுதி மற்றும் லால்குடியை அடுத்த மணக்கால், கொப்பாவளி, ஆதிக்குடி, நடராஜபுரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கணக்கிட்டு அதையும் அகற்ற வேண்டும். அப்போது தான் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story