ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குமரமலையை சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் ஆடு ஒன்று வளர்த்து வந்தார்.
அன்னவாசல்,
இந்த நிலையில் அந்த ஆடு குட்டி ஒன்றை ஈன்று இறந்துவிட்டது. இதனால் அந்த குட்டி பால் இன்றி தவித்து வந்தது. இந்தநிலையில் துரைச்சாமி வீட்டில் வளர்க்கும் நாயே தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டுகிறது.
ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவலை கேள்விப்பட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து துரைச்சாமி கூறுகையில், குட்டியை ஈன்ற நான்கே நாட்களில் தாய் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது. அதன் பிறகு நான் வளர்க்கும் நாயிடம், ஆட்டுக்குட்டி தானாக சென்று பால் குடித்தது.
முதலில் நாங்கள் பயந்தோம் ஆட்டுக்குட்டியை கடித்து விடுமோ அல்லது நாயின் பால் ஆட்டுக்குட்டிக்கு ஏற்றுக்கொள்ளுமா? என்றெல்லாம் யோசித்தோம். ஆனால் நாய் அந்த ஆட்டுக்குட்டியை தனது பிள்ளைபோல் அரவணைத்து அன்பு காட்டி, பாலூட்டி வருகிறது. இது எங்களுக்கே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார்.
Related Tags :
Next Story