விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை


விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2018 9:38 PM GMT (Updated: 27 Dec 2018 9:38 PM GMT)

விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீசார் சார்பில் பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி, பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் பேசுகையில், பெரம்பலூர் நகரில் ஷேர் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு அதிகமாக ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றக்கூடாது. ஆட்டோ ஓட்டும் போது டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். அதிக வேகத்தில் ஆட்டோக்களை இயக்க கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை சாலையின் நடுவே நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்க கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கினால் டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் ஆட்டோ பறிமுதல் செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து ஷேர் ஆட்டோக்களை, அதன் டிரைவர்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story