கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தரைக்கடை-தள்ளுவண்டி வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்


கரூர் தாலுகா அலுவலகம் முன்பு  தரைக்கடை-தள்ளுவண்டி வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:25 AM IST (Updated: 28 Dec 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட சாலையோர தரைக்கடை, தள்ளுவண்டி கடை சிறு வியாபாரிகள் சங்கத்தினர் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். சாலையோர வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநில துணைத் தலைவர் பிச்சைமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

கரூர்-கோவை சாலையில் நீண்ட நாட்களாக தள்ளுவண்டி, தரைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வியாபாரம் செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் கூட்டுறவு வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், கரூர் நகரை சேர்ந்த சாலையோர தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story