சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வரும் பெண் ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதில் வெனிசுலா நாட்டை சேர்ந்த லூசியா ஜார்ஜியா லுபஸ் (வயது27) என்ற பெண்ணின் உடைமையில் சந்தேகத்திற்கு இடமாக துணி தொங்க போட பயன்படும் மரத்தில் ஆன 9 ஆங்கர்கள் இருந்தன.
எனவே அதிகாரிகள் அந்த ஆங்கர்களை உடைத்து பார்த்தனர். அப்போது அதற்குள் தடை செய்யப்பட்ட மெத்தாகுலோன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதிகாரிகள் அதில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த வெனிசுலா பெண்ணை கைது செய்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அந்த போதைப்பொருளை பன்ட்ரிக் என்பவர், மும்பையில் ஒருவரிடம் கொடுக்க அனுப்பியதாக கூறினார். மேலும் போதைப்பொருளை கடத்தி வர அவர் 5,000 அமெரிக்க டாலரை கமிஷனாக பெற்று உள்ளார். இதையடுத்து அந்த பெண் யாரிடம் போதைப்பொருளை கொடுக்க வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story