புத்தாண்டையொட்டி இரவு முழுவதும் ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் : முதல்-மந்திரிக்கு, ஆதித்ய தாக்கரே கடிதம்
புத்தாண்டையொட்டி இரவு முழுவதும் ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதல்-மந்திரிக்கு ஆதித்ய தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,
சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 24 மணிநேரமும் மும்பையில் வணிக, கேளிக்கை அமைப்புகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அரசை வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் அவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் அவர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மும்பை, புனே, தானே உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள நகரங்களில் இரவு முழுவதும் ஓட்டல், கேளிக்கை விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் பகலில் ஒரு விஷயம் சரி என்றால், இரவிலும் அது தவறாக இருக்காது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இரவு முழுவதும் நகரம் செயல்பட அனுமதிப்பதால் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story