காசர்வடவிலி - காய்முக் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி : ரூ.949 கோடியில் நிறைவேற்றப்படுகிறது


காசர்வடவிலி - காய்முக் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி : ரூ.949 கோடியில் நிறைவேற்றப்படுகிறது
x
தினத்தந்தி 28 Dec 2018 5:17 AM IST (Updated: 28 Dec 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் காட்கோபர் - வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

மும்பை,

தானேயில் உள்ள காசர்வடவிலி - காய்முக் இடையே ரூ.949 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கு நேற்று மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

ஏற்கனவே மும்பை வடலாவில் இருந்து காட்கோபர் வழியாக காசர்வடவிலி வரை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இது காசர்வடவிலியில் இருந்து காய்முக் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரெயில் திட்டங்கள் மூலம் மக்கள் தென்மும்பை பகுதியில் இருந்து தானே மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும்.

ஏற்கனவே தானே - பிவண்டி - கல்யாண், தகிசர் - மிராரோடு, தகிசர் - டி.என். நகர், டி.என்.நகர் - மான்கூர்டு, அந்தேரி - தகிசர், கொலபா - சீப்ஸ் - பாந்திரா உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story