நெல்லையில், 31–ந் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடக்கிறது


நெல்லையில், 31–ந் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடக்கிறது
x
தினத்தந்தி 29 Dec 2018 3:15 AM IST (Updated: 28 Dec 2018 7:13 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வருகிற 31–ந் தேதி (திங்கட்கிழமை) முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடைபெற உள்ளது.

நெல்லை, 

நெல்லையில் வருகிற 31–ந் தேதி (திங்கட்கிழமை) முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடைபெற உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றிட தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி வேலை வாய்ப்பை வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்தோடு உலக முதலீட்டாளர் மாநாடு தமிழக முதல்–அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாடு அடுத்த மாதம் (ஜனவரி) 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தொழில் சார்ந்த முதலீடுகளை தமிழகத்தில் எற்படுத்திட தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன.

ரூ.500 கோடி இலக்கு

நெல்லை மாவட்டத்தில் சுமார் ரு.500 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 31–ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அப்னா ஓட்டலில் எனது தலைமையில் (கலெக்டர்) நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கி பேசுகிறார்.

இந்த அரிய வாய்ப்பினை ஆர்வமுள்ள தொழில் முனைவேர்கள் பயன்படுத்திக் கொண்டு தொழில் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story