ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள்: இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ஆத்தூர்-நரசிங்கபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ஆத்தூர்- நரசிங்கபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்றும், நாளையும் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மேலும் மேச்சேரி, ஓமலூர், கருப்பூர், கன்னங்குறிச்சி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், பி.என்.பட்டி, பேளூர், வனவாசி, தாரமங்கலம், கீரிப்பட்டி, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, தெடாவூர் மற்றும் வீரகனூர், சேலம், பனமரத்துப்பட்டி, தலைவாசல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் இந்த 2 நாட்களுக்கு உள்ளூரில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story