மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அய்யர்மலை, தோகைமலை உள்பட 9 துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தம்


மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அய்யர்மலை, தோகைமலை உள்பட 9 துணை மின் நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Dec 2018 3:45 AM IST (Updated: 29 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அய்யர்மலை, தோகைமலை உள்பட 9 துணைமின்நிலையங்களில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

குளித்தலை, 

புதுக்கோட்டை மாவட்டம், கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர், ஆகிய 9 துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதன் விவரம் பின்வருமாறு:-

அய்யர்மலை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியாம்பட்டி, வேங்காம்பட்டி, திம்மம்பட்டி ,கோட்டமேடு, இரும்பூதிபட்டி, கருங்களாப்பள்ளி, கணக்கப்பிள்ளையூர், கோடங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கட்டாரிபட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, மேட்டுபட்டி, பாப்பக்காபட்டி.

தோகைமலை துணை மின்நிலையத்திற்குட்பட்ட தோகைமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமான்கிணம், நாகனூர், வாழைக்கிணம், கழுகூர், வேம்பத்தூராம்பட்டி, கே.துறையூர், முட்டக்காம்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி மற்றும் குண்ணாகவுண்டம்பட்டி. நச்சலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட நச்சலூர், நல்லூர், ஆர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கள்ளை.

வல்லம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட லாலாபேட்டை, சிந்தலவாடி, திம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, கொட்டாம்பட்டி, ஓமாந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி, மற்றும் பாலப்பட்டி. மாயனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, சேங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியப்பட்டி, சின்னசேங்கல் மற்றும் கீழமுனையனூர்.

பஞ்சப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அனைக்கரைப்பட்டி மற்றும் புதுவாடி. பாலவிடுதி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பாலவிடுதி, தளிவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரபட்டி, குரும்பப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பாடி, கழுத்தாரிக்கப்பட்டி, கோடங்கிபட்டி, சின்னாம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி மற்றும் பூலாம்பட்டி.

சிந்தாமணிபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையாப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், பால்மடைப்பட்டி, சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி மற்றும் வாளியாம்பட்டி.

கொசூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கொசூர், பள்ளிக்கவுண்டனூர், தந்திரிபட்டி, ஒட்டபட்டி மற்றும் சந்தையூர் ஆகிய பகுதிகளில் இன்று மின்வினியோகம் இருக்காது என குளித்தலை மின்சாரவாரிய செயற் பொறியாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story