20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 19-வது நாளாக வேலை நிறுத்தம் - அரசு பணிகள் பாதிப்பு


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 19-வது நாளாக வேலை நிறுத்தம் - அரசு பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2018 4:45 AM IST (Updated: 29 Dec 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 19-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 19-வது நாள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதைதொடர்ந்து திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் வட்ட தலைவர் ககாரின், வட்ட பொருளாளர் பாலசுப்்பிரமணியன், நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜா, ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

இதேபோல நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நீடாமங்கலம் வட்ட தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 19-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றதால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.


Next Story