அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2018 6:11 AM IST (Updated: 29 Dec 2018 6:11 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

இதற்கு சங்கத்தின் செயலாளர் குமரி ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆளவந்தார், பொருளாளர் சிவக்குமார், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையாக ஒரு மாத சம்பளத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் உடையார்பாளையம் வட்ட கிளை சார்பில் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சிபி ராஜா தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர் துரை, வட்டாட்சியர் கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.

Next Story