தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி வாலிபர் மீது வழக்கு


தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 8:08 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர், 

வாலாஜாவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியை சேர்ந்த உதயக்குமார் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயனிடம், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு தெரிந்தவர்கள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் உனக்கு வேலை வாங்கித் தருவதாகவும் உதயக்குமார் கூறியிருக்கிறார்.

அதேபோன்று கார்த்திகேயனின் நண்பர்களிடத்திலும் தெரிவித்துள்ளார். மேலும் வேலை வாங்குவதற்காக கார்த்திகேயன், அவருடைய நண்பர்கள் 5 பேர் என 6 பேரிடமும் முதலில் தலா ரூ.10 ஆயிரம் பெற்றுள்ளார்.

பின்னர் சிறிதுநாள் கழித்து அவர்களுடைய வீட்டிற்கு சென்று ரூ.14 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு நீண்டநாட்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன் இதுபற்றி வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதயக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story