குற்றச்சாட்டுகள் கூறியதால் எஸ்.வி.நகரம் கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜினாமா


குற்றச்சாட்டுகள் கூறியதால் எஸ்.வி.நகரம் கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜினாமா
x
தினத்தந்தி 30 Dec 2018 4:15 AM IST (Updated: 29 Dec 2018 9:51 PM IST)
t-max-icont-min-icon

குற்றச்சாட்டுகள் கூறியதால் எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜினாமா செய்தார்.

ஆரணி, 


ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாதாந்திர பேரவை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பாலு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட துணைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் ராஜேந்திரன் மீது 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்களை மாவட்ட கலெக்டருக்கும், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் ஆகியோருக்கும் அனுப்பிய நகல்களை இயக்குனர்களிடம் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி தலைவரிடம் மனுவை கொடுத்தார்.

அப்போது இயக்குனர் முரளி பேசுகையில், கடன் கேட்டு வரும் வாடிக்கையாளரிடம் செயலாளர் தன்னிச்சையாக முடிவு செய்து விடுகிறார். கூட்டத்தில் வைத்து இயக்குனர்களிடம் ஒப்புதல் பெற்று கடன் தரலாம். ஒரு நபருக்கு தான் இயக்குனர்கள் ஜாமீன் தரவேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் ஒரே ஜாமீன்தாரர் பலருக்கு ஜாமீன் கொடுத்து கடன்களை செயலாளர் கொடுத்து வருகிறார். இதை கேட்டால் இயக்குனர்கள் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் என்கிறார்.

அப்போது மற்றொரு இயக்குனர் மாமண்டூர் முத்து, செயலாளர் மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறுகிறீர்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து துணைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில், சங்கத்தின் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு டெண்டர்கள் விடாமல் தலைவராக இருந்தவரே தன்னிச்சையாக செயலாளர் ஒப்புதலுடன் செய்துள்ளார்.

அதற்கு தலைவர் பாலு, இதற்கு முன்பு செயலாளராக இருந்த சவுந்தர்ராஜன் பணிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். அவர் காலத்தில் நடந்த தகவல். மேலும் தலைவராக உள்ளவர் ரூ.25 லட்சம் வரை பணிகள் செய்து கொள்ளலாம். செயலாளரின் ராஜினாமா கடிதம் குறித்து இயக்குனர்களிடம் ஒப்புதல் பெற்று கூட்டுறவுத்துறைக்கு அனுப்பி முடிவு எடுக்க முடியும் என்றார்.

Next Story