பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். இதன் அழகை கண்டுகளிக்கவும், இங்கு குளிப்பதற்கும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். முக்கியமான விடுமுறை நாட்களில் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள். ஆனால் தற்போது அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பள்ளிக்கூட அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால் அகஸ்தியர் அருவி களை கட்டியது. இதையொட்டி பாபநாசத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது.
Related Tags :
Next Story