பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை பொது மேலாளர் தகவல்


பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 29 Dec 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.180-க்கு செய்யப்படும் டாப்-அப்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் முழு டாக்டைம் வழங்குகிறது. இச்சலுகை சி டாப் அப், மொபைல் வாலட் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்-அப்களுக்கு பொருந்தும்.

அன்லிமிடெட் ரூ.349 தரைவழி திட்டத்தில் இதுவரை தமிழ்நாட்டில் அனைத்து அழைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது, கூடுதலாக நாடு முழுவதற்கும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 24 மணி நேரமும் அளவற்ற இலவச அழைப்புகள் நாளை மறுநாள்(1-ந் தேதி)முதல் வழங்கப்படுகிறது.

எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் ரூ.249, பிளான் எக்ஸ்பீரியன்ஸ் ரூ.299 திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. தினமும் அளவற்ற டேட்டா மற்றும் அளவற்ற பி.எஸ்.என்.எல். அழைப்புகள், ரூ.300 மதிப்புள்ள இலவச மற்ற நெட்வொர்க் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. கால்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவற்ற கால்கள் இரவு 10.30 முதல் காலை 6 மணி வரையிலும் மற்றும் ஞாயிறு முழுவதும் வழங்குகிறது. புதிய வாடிக்கையாளர்களுக்கு இப்பிளானை ஆக்டிவேட் செய்த முதல் 6 மாதங்களுக்கு ரூ.50 கேஷ்பேக் ஆபராக மாதந்தோறும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story