மனைவியின் ஆபாச படங்களை வெளியிடுவேன் என தொழிலாளியிடம் மிரட்டல் - வாலிபர் கைது


மனைவியின் ஆபாச படங்களை வெளியிடுவேன் என தொழிலாளியிடம் மிரட்டல் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2018 3:30 AM IST (Updated: 30 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மனைவியின் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகேயுள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய அரசன் (வயது 24). இவர் ஒரு தொழிலாளியிடம், அவரது மனைவிக்கும், இன்னொருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறினார். மேலும், அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் மற்றும் ஆபாச படங்கள் எனது செல்போனில் உள்ளது. ரூ.20 ஆயிரம் கொடுத்தால் அவற்றை வெளியிடமாட்டேன். இல்லையென்றால் செல்போனில் உள்ள படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதேபோல் பெரிய அரசன் பலமுறை தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த தொழிலாளி தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய அரசனை கைது செய்தனர். இவர் இதேபோல் பலரிடம் பணம் பறித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story