நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 5-ந் தேதி ஜெயந்தி விழா 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 5-ந் தேதி ஜெயந்தி விழா 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்ச நேயர் கோவிலில் வருகிற 5-ந் தேதி ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி ஆஞ்ச நேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் 2019-ம் ஆண்டில் வருகிற ஜனவரி 5-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக் கப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story