பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்


பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Dec 2018 2:37 AM IST (Updated: 30 Dec 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

பழனி கோவிலுக்கு சென்று திரும்பியபோது, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி,

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் இதயமன்னன்(வயது 43). இவர், உறவினர் வசந்தன், அவரது மனைவி பனிமலர், குழந்தைகள் இன்சுவை(5), இதழினி(3) மற்றும் சிறுவன் ரித்தின்(12) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றார். பின்னர் நேற்று காலை பழனியில் இருந்து மீண்டும் தஞ்சைக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கார் வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென பாய்ந்து வந்தது.

இதனால் இதயமன்னன் நிலைத்தடுமாறி காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து கவிழ்ந்தது. இதில், காருக்குள் இருந்த இதயமன்னன், வசந்தன், அவரது மனைவி பனிமலர் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 6 பேரும் காயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று காருக்குள் காயங்களுடன் கிடந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று காலை ஏராளமானோர் திரண்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story