திட்டச்சேரி பச்சான் தோப்பு தெருவில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை தூர்வார வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


திட்டச்சேரி பச்சான் தோப்பு தெருவில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை தூர்வார வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2018 4:00 AM IST (Updated: 30 Dec 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி பச்சான் தோப்பு தெருவில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் மெயின் சாலையில் பச்சான் தோப்பு தெரு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகே கரிகுளம் உள்ளது. இந்த குளத்தில் கொள்ளிடம் குடிநீரின் உபரி தண்ணீர் கலப்பதால் ஆண்டு முழுவதும் வற்றாத குளமாக உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் குளிப்பதற்கும், பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கரிகுளம் தற்போது 3 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தை சுற்றி கருவேல மரம், செடி, கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரை மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது.

இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் தண்ணீர் மாசு படிந்து காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டச்சேரி பச்சான் தோப்பு தெருவில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story