தனியார் மில்லில் இருந்து மாயமான இளம்பெண் காதலனுடன் பெட்ரோல் குடித்து தற்கொலை முயற்சி


தனியார் மில்லில் இருந்து மாயமான இளம்பெண் காதலனுடன் பெட்ரோல் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 30 Dec 2018 4:00 AM IST (Updated: 30 Dec 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை தனியார் மில்லில் இருந்து மாயமான இளம்பெண் காதலனுடன் பெட்ரோல் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமதுரை, 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரண்யா (வயது 19), சந்தியா (21). இவர்கள், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நாடுகண்டானூர் பிரிவு அருகே தனியார் மில்லில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், விடுதியில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து மில்லின் உதவி பாதுகாப்பு அதிகாரி கங்காதரபாலாஜி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்களை தேடி வந்தனர்.

விசாரணையில் சரண்யா அவரது காதலன், இலுப்பூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவருடன் மாயமாகியது தெரியவந்தது. நூற்பாலையில் இருந்து மாயமான சரண்யா, சதாம் உசேனுடன் கேரளா, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். கையில் இருந்த பணம் செலவானதால் காதலர்கள் இருவரும் வீடு திரும்ப முடிவு செய்தனர்.

ஆனால் பெற்றோர் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்த காதலர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவெடுத்தனர். அதன்பின்னர் இருவரும் திருச்சிக்கு வந்து பெட்ரோலை வாங்கி குடித்துவிட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story