பயிற்சி மைய உரிமையாளர்களை கடத்தி பணம் பறிக்க முயன்ற காங்கிரஸ் கவுன்சிலர் கைது


பயிற்சி மைய உரிமையாளர்களை கடத்தி பணம் பறிக்க முயன்ற காங்கிரஸ் கவுன்சிலர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2018 5:31 AM IST (Updated: 30 Dec 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி மைய உரிமையாளர்களை கடத்தி பணம் பறிக்க முயன்ற காங்கிரஸ் கவுன்சிலர் சச்சின் முஸ்கே என்பவரை போலீசார் கைது செய்தனர்.

லாத்தூர்,

லாத்தூர் நகர் பகுதியில் அரசு மற்றும் பொதுத்துறை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தை நடத்தி வந்தவர்கள் விஜய் பரிகார் மற்றும் ராஜூ திவேதி. இவர்களை கடந்த வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் சச்சின் முஸ்கே என்பவர் கடத்திச்சென்றார்.

அவர்களிடம் பயிற்சி மையத்தை தொடர்ந்து நடத்தவேண்டுமானால், தனக்கு ரூ. 25 லட்சம் கொடுக்கவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் பணத்தை எடுத்துவரக் கூறி இருவரையும் அவர் விடுவித்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பரிகார் மற்றும் ராஜூ் திவேதி இருவரும் சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பயிற்சி மைய உரிமையாளர்களை கடத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்திற்காக கவுன்சிலர் சச்சின் முஸ்கேவை கைது செய்தனர்.

அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒருமுறை பயிற்சி மைய உரிமையாளர்கள் இருவரையும் கடத்தி சச்சின் முஸ்கே ரூ.6 லட்சம் வரை பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

Next Story