தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட்டு: பெங்களூரு பெண் கைது எந்திரம் திறந்து கிடந்ததாக வாக்குமூலம்
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை திருடிய பெங்களூருவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4 லட்சத்தை போலீசார் மீட்டனர். அவர் தனது வாக்குமூலத்தில் ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்ததாக தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதிய பஸ் நிலையத்துக்கு எதிரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு பணம் எடுக்க ஒரு பெண் வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை அந்த பெண் முறைகேடாக கையாண்டு அதில் உள்ள பணத்தை திருடிச் சென்றார்.
ஏ.டி.எம். எந்திரம் முறைகேடாக கையாளப்பட்டது குறித்து உடனடியாக மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு அந்த எந்திரம் தானியங்கி முறையில் தகவல் அளித்தது. உடனே அந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வங்கி அதிகாரிகளுக்கும், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மற்றும் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த பெண் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த 5 லட்சத்து 8 ஆயிரத்து 700 ரூபாயை திருடிவிட்டு தப்பிவிட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்தின் உள்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண் யார்? என விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் திருடிய பணத்துடன் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற அந்த பெண்ணை போலீஸ்காரர் சிரஞ்சீவி பிடித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து அந்த பெண்ணை போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த சித்ரா என்கிற ஏஞ்சல் (வயது 28) என்பது தெரியவந்தது. இவர், புதுவை கரியமாணிக்கம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தார். இவர் எய்ட்ஸ் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தன்னார்வலர்களாக உள்ளார். இவருடைய கணவர் மணிகண்டன். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது.
கைதான சித்ரா போலீசில் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-
நான் நேற்று (நேற்று முன்தினம்) ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்தேன். அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் அறையின் கதவு திறந்து கிடந்தது. எனவே நான் எந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் திருடப்பட்ட பணத்தில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 120-யை மட்டும் அவரிடமிருந்து போலீசார் மீட்டனர். மீத பணத்தை அவர் செலவு செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் சித்ராவை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உருளையன்பேட்டை போலீசாரை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் பாராட்டினார். மேலும் போலீஸ்காரர் சிரஞ்சீவியை பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

Related Tags :
Next Story