பட்ஜெட் திட்டங்களுக்கு தடை போடவில்லை கவர்னர் கிரண்பெடி ஆவேசம் ‘நான் ரப்பர் ஸ்டாம்பு கிடையாது’
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒரு போதும் தடை போடவில்லை.ஜனாதிபதியிடம் இருந்து வந்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நான் செயல்படுகிறேன்.நான் ரப்பர் ஸ்டாம்பு இல்லை’ என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
சென்னை,
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அதிகாரப் பகிர்வில் பகிரங்கமாக கருத்து மோதல் நிலவி வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் யூனியன் பிரதேசம் என்றாலும் ஜனநாயக முறைப்படி இங்கு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைந்துள்ளதால் அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் முதல்-அமைச்சர் தரப்பில் வாதிடப்படுகிறது.
இந்த கருத்து மோதல் காரணமாக புதுவை மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம், தடை ஆகியவை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்காக இலவச பொருட்கள் வழங்க நான் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. மக்கள் பிரதிநிதிகள் நிதி இல்லாமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார்கள். புதுச்சேரி பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டதோ அவை நிறைவேற்றப்படுகிறது. எந்த திட்டத்திற்கும் தடை போடவில்லை.
மக்களுக்கு எதையும் பொருட்களாக வழங்காமல், அவர்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் போதும். தேவையான பொருட்களை அவர்களே வாங்கி கொள்வார்கள். எந்த திட்டமாக இருந்தாலும் பட்ஜெட்டில் கொண்டு வந்து நிதி நிலையை கருத்தில் கொண்டு செயல்படுத்தலாம்.
புதுச்சேரி அரசு அனுப்பிய எந்தவொரு கோப்பும் என்னிடம் இல்லை. என்னுடைய ஆதரவு புதுச்சேரி அரசுக்கு உள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான கோப்புகளும் என்னிடம் இல்லை. தினமும் இரவு 11 மணி வரை பணியாற்றுகிறேன். நிர்வாக அதிகாரியாக என்னுடைய கடமைகளை செய்கிறேன். என்னுடைய அலுவலகத்துக்கு வரும் கோப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை முடித்து அனுப்பி வைக்கப்படும்.
நான் நிர்வாகம் சீராக நடக்கிறதா? என்பதை கவனித்து செயல்படுகிறேன். நான் ரப்பர் ஸ்டாம்பு கிடையாது. என்னிடம் கோப்புகளை அனுப்பினால் படித்து ஆராய்ந்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு உள்ளதா? என்பதை பார்த்து தான் கையெழுத்து போடுவேன்.
இல்லாவிட்டால் என்னிடம் கோப்புகளை அனுப்பாமல் நீங்களே ரப்பர் ஸ்டாம்பு போட்டுக்கொள்ளுங்கள். ஜனாதிபதியிடம் இருந்து வந்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நான் செயல்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் கோப்புகள் மாதக்கணக்கில் தேங்கி இருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
நான் நிர்வாகம் சீராக நடக்கிறதா? என்பதை கவனித்து செயல்படுகிறேன். நான் ரப்பர் ஸ்டாம்பு கிடையாது. என்னிடம் கோப்புகளை அனுப்பினால் படித்து ஆராய்ந்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு உள்ளதா? என்பதை பார்த்து தான் கையெழுத்து போடுவேன்.
இல்லாவிட்டால் என்னிடம் கோப்புகளை அனுப்பாமல் நீங்களே ரப்பர் ஸ்டாம்பு போட்டுக்கொள்ளுங்கள். ஜனாதிபதியிடம் இருந்து வந்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நான் செயல்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story