அரவக்குறிச்சி ஊராட்சியில் சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


அரவக்குறிச்சி ஊராட்சியில் சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Dec 2018 6:18 AM IST (Updated: 30 Dec 2018 6:18 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் சாலைகளை மேம்பாடு செய்வதற்கு மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 77 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரவக்குறிச்சி,

இதையடுத்து அதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மேற்கண்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வேலம்பாடி மற்றும் பொன்னாரம் பகுதியில் 26 பயனாளிகளுக்கும், வெடிக்காரன்பட்டியில் 11 பயனாளிகளுக்கும், மானார்பட்டியில் 6 பயனாளிகளுக்கும், சாந்தபாடியில் 4 பயனாளிகளுக்கும், வீடுகளை பழுது நீக்கிக்கொள்ள ரூ.13 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நிவாரண உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து மீனாட்சி வலசில் செயல் பட்டுவரும் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், திருஞானம், நடராஜன், முரளிதரன், வட்டாட்சியர் பிரபு (அரவக்குறிச்சி), கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் காளியப்பன், மார்க்கண்டேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story