புத்தாண்டு கொண்டாட்டம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


புத்தாண்டு கொண்டாட்டம் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2018 4:15 AM IST (Updated: 30 Dec 2018 10:20 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு விழாவையொட்டி குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி எச்சரிக்கை விடுத்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆகிய முக்கிய சாலைகளில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

நட்சத்திர ஓட்டல்களில் அனுமதியின்றி மதுவிருந்து, கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக் கூடாது.

மாமல்லபுரம், கோவளம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி யாரும் நடந்துகொள்ள கூடாது. சென்னையில் இருந்து மாமல்ல புரம் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story