சப்-இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் பணி இடமாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 6 பேரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்திற்கும், நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ராசிபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல் திருச்செங்கோடு புறநகர் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்திற்கும், பேளுக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, பள்ளிப்பாளையம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும், வெண்ணந்தூர் ரோந்து பிரிவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராமன், வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் விஜயராஜை நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இருந்து சேந்தமங்கலத்திற்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவரை மீண்டும் நாமக்கல் போலீஸ் நிலையத்திலேயே பணியில் தொடரவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story