தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் மரக்கிளைகள் தீயில் எரிந்து சாம்பல்
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 11 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. கஜா புயலால் தஞ்சை நகரில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
தஞ்சாவூர்,
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 11 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் உள்ளது. கஜா புயலால் தஞ்சை நகரில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அப்புறப்படுத்தப்பட்ட மரக்கிளைகள், குப்பைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகராட்சி மைதானத்தில் கொட்டப்பட்டிருந்தன.
நேற்றுபிற்பகல் திடீரென இந்த மரக்கிளைகள், குப்பைகளில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த சிலர், தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தாலும் பாதி அளவு மரக்கிளைகள் தீயில் எரிந்து சாம்பலானது. மைதானத்தில் பகல் நேரத்தில் ஏராளமானோர் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்படி மது குடித்தவர்கள் யாராவது வேண்டுமென்றே தீ வைத்துவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story