புதுச்சத்திரம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.3½ லட்சம் பறித்த வாலிபர் சிக்கினார்
புதுச்சத்திரம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.3½ லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி,
புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து, அதனை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் வேதவள்ளி நகரை சேர்ந்த மணி மகன் பாம்பு என்கிற சபரி (வயது 22) என்பதும், கடந்த 9.8.17 அன்று சிலம்பி மங்களம் ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை சரமாரியாக தாக்கி, அவர் வைத்திருந்த 3 லட்சத்து 53 ஆயிரத்து 250 ரூபாயை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா பாம்பு என்கிற சபரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story