ஒர்லி ரசாயன குடோன் தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 16 பேர் காயம்
மும்பை ஒர்லியில் உள்ள சாதனா மில் காம்பவுண்ட் பகுதியில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த ரசாயன குடோனில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.
மும்பை,
இதனால் அங்கிருந்து குபுகுபுவென கரும்புகை வந்துகொண்டிருந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் துரிதமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 ஆயிரம் சதுரஅடி இருந்த குடோனில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
முன்னதாக தீயணைப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீராங்கனை சுவாதி மற்றும் வீரர்கள் சுவப்னில், கவுதம், விஜய், சஞ்சய், உள்பட 16 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் கே.இ.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சுவப்னில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story