நந்திவரம் கிராமத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை


நந்திவரம் கிராமத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2019 3:45 AM IST (Updated: 31 Dec 2018 9:51 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திரவம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் எதிரே சின்ன குளம் உள்ளது. இந்த குளத்தில் அதிகளவு நீர் நிரம்பி காணப்படுகிறது.

வண்டலூர்,

இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த குளத்தில் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் பைகள், டம்ளர், பாட்டில்கள் உள்பட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் மிதக்கிறது. இதனால் குளத்தில் உள்ள நீர் மாசு அடைகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த குளத்தை சுற்றி தினமும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு, பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பாட்டில்களை அப்படியே குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் தற்போது குளத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் குளத்தில் மிதக்கும் கழிவுகளை அகற்றி, குளத்தை சுற்றி முள்வேலி அமைக்க வேண்டும். இந்த குளக்கரை பகுதியில் இளைஞர்கள் மது அருந்துவதால், இரவு நேரங்களில் இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story